14.9.10

காதல்

ஒரு கணவன் மனைவி அந்நியோன்யத்தை இதைவிட ஒருப் பாடல் வெளிப்படுத்திவிடுமா?
நமக்குமிதுப் போல் ஒரு துணைக் கிடைக்குமா? என்று ஏங்க வைக்கும் பாடல்.
காலத்தையும் தாண்டி என் மனதில் நின்ற பாடல்.

பெண்: நான் பேச நினைப்பதெல்லாம்
             நீ பேச வேண்டும், நீ பேச வேண்டும்.
.            நாளோடும் பொழுதோடும்
             உறவாட வேண்டும். உறவாட வேண்டும்.
         
 ஆண்:  நான் காணும்  உலகங்கள்
               நீ காண வேண்டும், காண வேண்டும்
              நீ காணும் பொருள்
              யாவும் நானாக  வேண்டும், நானாக  வேண்டும்.
                              (நான்...,)


பெண்:  பாலோடுப் பழம் யாவும்
              உனக்காக வேண்டும், உனக்காக வேண்டும்.
               பாவை, உன் முகம் பார்த்துப்
               பசியாற வேண்டும், பசியாற வேண்டும்.
               மனதாலும், நினைவாலும்         
               தாயாக வேண்டும். நானாக வேண்டும்
              மடிமீது விளையாடும்
             சேயாக வேண்டும் நீயாக வேண்டும்.
                                                            (நான் ..,)

             சொல்லொன்றும் மொழியென்றும்,
            பொருள் என்றுமில்லை,பொருள் என்றுமில்லை.
            சொல்லாத சொல்லுக்கு
            விலையேதுமில்லை.விலையேதுமில்லை.
            ஒன்றோடு ஒன்று உயிர் சேர்ந்த பின்னே
             உயிர் சேர்ந்தப் பின்னே,
             உலகங்கள் நமையன்றி 
             வேறேதுமில்லை,வேறேதுமில்லை.
                           (நான்...,)         

 படம்: பாலும், பழமும்
நடிகர்கள்: சிவாஜிகணேசன், சரோஜாதேவி
இசை: M.S.விஸ்வநாதன்,
படலை எழுதியவர்: கண்ணதாசன்.

                    

கருத்துகள் இல்லை: