18.9.10

ஏக்கம்

தானே  தேர்ந்தெடுத்த வாழ்க்கை சரியாக அமையாமல் போனதால்,
சேரவும்  முடியாமல், விலகவும்  முடியாமல் பாடும் பெண்ணின் மனோநிலையும்,  உன் நிலைக்கு நான் காரணமல்ல  என்று சொல்லும் ஆணின்  பதிலும் இணைந்த பாடல். இதில் காதல், சோகம், ஏக்கம் அனைத்தும் உள்ளது ..,
------------------------------------
பெண்: ஆரிராரோ, ஆரிராரோ,
              ஆரிராரோ,ஆரிராரோ
              சின்ன சிறுக் கிளியே
             சித்திரப் பூ விழியே             
             அன்னை மனம் எங்கும்
             தந்தை  மனம் தூங்கும்
             நாடகம்  ஏனடா?
             நியாயத்தைக் கேளடா?    
                                        (சின்னஞ்....,  )
             சுகமே     நினைத்து,
             சுயவரம் தேடி ,
             சுழல்மேல் தவிக்கும்
             துயரங்கள் கோடி,
             மழைநீர் மேகம்
            விழிகளில் மேவும்
            இந்த நிலை மாறுமோ,
            அன்பு வழி சேருமோ?
            கண்கலங்கி பாடும் எனது பாசம்
            உனக்கு வேஷமோ?
            வாழ்ந்தது போதுமடா
            வாழ்க்கை இனி ஏன் ?
                          
ஆண்:   சின்னஞ்  சிறுக் கிளியே
             சித்திரப்பூ விழியே
             உன்னை எண்ணி நானும்
             உள்ளம் தடுமாறும்
            வேதனைப்  பாரடா? 
            வேடிக்கை தானடா?
                                   (சின்னஞ் ...,)  
            மயிலே உனை நான் மயக்க்கவுமில்லை,
           மனதால் என்றும்  நான் வெறுக்கவுமில்லை,
           எனை நீ தேடி இணைந்ததுப் பாவம்,
           எல்லாம் நீயே எழுதியக் கோலம்,
           இந்த  நிலைக் காணும்பொழுது
           நானும்  அழுது    வாழ்கிறேன்
           காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ?
                                 (சின்னஞ்....,)
படம்: முந்தானை முடிச்சு,
நடிகர்கள்: கே. பாக்கியராஜ், ஊர்வசி
பாடியவர்கள்: எஸ் .பி.பாலசுப்ரமனிடம், எஸ்.ஜானகி .
இசை: இளையராஜா.
  

 

கருத்துகள் இல்லை: