15.9.10

பிரிவு

அடைந்துவிடுதல் என்பது சுகந்தான், ஏன் மறந்தும்கூடப் போகலாம், ஆனால் இழந்துவிட்டால்...,???
தன்   காதலின் கடைசித் தினத்தை எண்ணும் மனக்குமுறலை  இதைவிடவா வேறு சொல்லால் உணர்த்திவிட முடியும்?
எனக்கு இந்த பாடல் எழுதி, இசையமைத்தவர் T.ராஜேந்தர்.
இப்போ எங்கே இந்த T .R ?
++++++++++++++++++++++++++
திருமணந்தான் நடக்குதுங்க
ஊருசனம் மகிழுதுங்க,
ஏதோ சில மனங்கள் தூக்குதுங்க.
அதுமட்டுமங்கு அழுவுதுங்க
அழுவுதுங்க அழுவுதுங்க ..,

அட காதலிச்சாப் போதாது 
அதை மூடிவைக்கக் கூடாது.
கல்யாணந்தான் சொர்க்கத்துல
நிச்சயக்கப்படுதாம்.
பத்திரிகை மட்டுமிங்கே
அச்சடிக்கப்படுதாம்.
                             (அடக் காதலிச்சா...,)
பொல்லாத விதியே, செய்யாத சதியே

ஊரையும்தான் கூட்டுறாங்க,
ஊர்வலம்தான் நடத்துறாங்க,
காதலிச்சோர் தவிக்குறாங்க,
காயத்தைதான் மறைக்குறாங்க.
வானவேடிக்கை வேட்டு வெடிக்குது
காதல்மாளிகை கேட்டு நொறுங்குது.
மேளங்கள் முழங்குதுங்க ,
ரத்தநாளங்கள் துடிக்குதுங்க
மேளங்கள் முழங்குதுங்க ,
ரத்தநாளங்கள் துடிக்குதுங்க
பன்னீரைத்  தெளிச்சு வரவேற்பு நடக்குதுங்க.
கண்ணீரில் குளிச்சு நெஞ்சங்கள் கரையுதுங்க
,                     (அடக் காதலிச்சா..,)

நாதஸ்வரம் ஊதுறாங்க, மந்திரங்கள் ஓதுறாங்க,
மாலையத்தான் மாத்துறாங்க, தாலியைத்தான் கட்டுறாங்க
அம்மி மிதிச்சுதான் சடங்கு நடக்குது,
அன்பை மிதிச்சுதான் விதியும் சிரிக்குது,
அக்கினியும் எரியுதுங்க
காதல் அத்தனையும்
கருகுதுங்க..,
பொருந்தாத உறவை ஊரும்தான்  வாழ்த்துதுங்க,
பொண்ணோட மனசு ஊமையாகி வாடுதுங்க.
                         ( அடக் காதலிச்சா ...,)

படம்: ஒருதாயின்சபதம்,
நடிகர்கள்: T .ராஜேந்தர்,
எழுதி இசையமைத்தவர்: T .ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை: