17.9.10

ஆவாரம்பூ

திருமணமான  பெண்ணின் காதலை கண்ணியமாக  சொன்னதால்
இப்பாடலும், படமும் பிடிக்கும்.





















ஆவாரம்பூ அந்நாளிலிருந்தே
யாருக்குக் காத்திருக்கு....,
அந்திப் பகல்
மழை வெயில் சுமந்தே
 உனக்காகப் பூத்திருக்கு சொந்த வேரோடுத்
தான்  கொண்டக் காதலினை
அது சொல்லாமல் போனாலும் தெரியாதா?
                                             (ஆவாரம்பூ..,)

காற்றிலாடித் தினந்தோறும்
உனது திசையைத் தொடருதடா.....,
குழந்தைக்கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தேக்  கிடக்குதடா...,
நெடுநாள் வந்த  நெருக்கம்
நினைப்பில் அதுக் கிடக்கும்..,
சருகுகள் சத்தம் போடும்,
தினம்  சூழ்நிலை  யுத்தம் போடும்
அதன் வார்த்தை  எல்லாம் மௌனமாகும்...,      
                             
                                    (சொந்த வேரோடு...,)

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றைக் காலில் நிற்குதடா..,
மாலையாகித் தவழ்ந்திடவே  
உனது மார்பைக் கேட்குதடா,
தனியில் அதுக் கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்
அதன் வாசங்கள்  எல்லாம் நீதான்..,
நீயும் விட்டுச்  சென்றால் பட்டுப் போகும்..,

                                      (ஆவாரம்பூ..,)


படம்: பூ
நடிகர்கள்: ஸ்ரீகாந்த், பார்வதி மேனன்,
இயக்குனர்: சசி
இசையமைப்பாளர்: S.S.குமரன்
பாடியவர்: சின்மயி




















கருத்துகள் இல்லை: