27.9.10

கண்ணதாசனை மிஞ்சிய கவிஞர் இல்லை என்பதை என்னை உணர வைத்தப் பாடல். ஒரே வார்த்தை அது தகப்பனுக்கும், காதலனுக்கும் பொருந்தும் வகையில் அமைத்தப் பாடல்.
****************************************************************

காதலன்: அவள் பறந்து போனாளே,
என்னை மறந்துப் போனாளே
நான் பார்க்கும்போது கண்களிரண்டை
கவர்ந்துப் போனாளே
(அவள்....,)
என் காதுக்கு மொழியில்லை,
என் நாவுக்கு சுவையில்லை,
என் நெஞ்சுக்கு நினைவில்லை,
இனி நிழலுக்கும் உறக்கமில்லை,
என் நிழலுக்கும் உறக்கமில்லை..,
(அவள்...)

தந்தை: இந்த வீட்டிற்கு விளக்கில்லை
சொந்த கூட்டிற்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை,
இனி ஆறுதல் மொழியில்லை
(அவள்,..,)

காதலன்: என் இதயத்தைப் பூட்டி வைத்தேன்,
அதில் எனையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே..
தந்தை: அவள் எனக்கா மகளானாள்?,
நான் அவளுக்கு மானானேன்.
என் உரிமைத் தாயல்லவா?
என் உயிரை எடுத்துச் சென்றாள்
(அவள்...,)

படம்:
நடிகர்கள்; தந்தையாக சிவாஜியும், காதலனாக முத்துராமனு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: அப்பாவாக டி.எம்.சௌந்தரராஜனும், காதலனாக பி.பி.ஸ்ரீநிவாசும்.


கருத்துகள் இல்லை: