13.11.10

சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
(சொன்னது....,)

மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன்
என்றதும் நீ தானே
இன்று சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே...,

(சொன்னது ...,

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
(அன்று சொன்னது...,

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடியவர்: பி.சுசிலா,
நடிகைகள்: முத்துராமன், தேவிகா
எழுதியவர்: கண்ணதாசன்


10.11.10

அவள் பெயர் தமிழரசி

காதல் பிரிவின் வலியை அருமையாய் சொல்லி இருக்கும் பாடல் படம். ஒரு வயலின் கதறுவதையே தனிமையில் இருக்கும்போது தாங்க முடியாது. இதில்
பல வயலின் கதறுவதை பின்னிரவில் கேட்கும்போது கண்ணீர் அரும்புவதை தடுக்க இயலாது.


வடக்கா, தெற்கா,
கிழக்கா, மேற்கா,
எந்த திசை போன புள்ள
என் நெஞ்சுக் கூடுத் தாங்கவில்ல.
இறைத் தேடிப் போன பறவை நீ
இன்னும் கூடு வந்து சேரலையே.

என் இருவிழி கரையுதடி
சொன்னாலும் கேட்கலையே..,
(வடக்கா...,)

நீ முகம் பார்க்கும் கண்ணாடில
நெத்திப் பொட்டு இருக்கு,

நீ குளிச்ச இடத்துலதான்
மஞ்சள் துண்டு கெடக்கு.

நீ விட்டத்துல சொருகிவச்ச
கோழி றெக்க இருக்குதடி,
நீ சிக்கெடுத்து போட்ட முடி
காலை சுத்தி கெடக்குதடி
என்னை சுத்தி எல்லாமே
உன்பேரத்தான் சொல்ல,
என்னை ஒத்தையில விட்டுப்புட்டா
நான் எங்க செல்ல?? நான் எங்க செல்ல?
(வடக்கா? ...)

நீ விரல் நீட்டி கொஞ்சம் பேசையில
வான வில்லும் உதிக்கும்..,
நீ நடந்த தடத்துலதான்
சொர்க்கவாசல் திறக்கும்..,
நீ எந்த திக்கு தெரியாமல்
துன்பப்பட்டு எரிஞ்சுப்புட்டேன்
இந்த பாவத்த தீர்த்துடத்தான்
எந்த ஆத்துலக் குளிக்கப் போவ
நான் அழுதக் கண்ணீரில்
நாளுக் காணி நிலம்
நிறைஞ்சிடுமே
உழுது விதைச்சாலும்
முப்போகம் விளஞ்சிடுமே
நல் முப்போகம் விளஞ்சுடுமே
(வடக்கா?...)