18.12.11

இளமையெனும் பூங்காற்று

ளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒருபொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்


இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒருபொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை.. ஒரே ராகம்..



தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா.!
                                           (
இளமையெனும் பூங்காற்று...)


அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ
என்ன உறவோ.!
                                    (
இளமையெனும் பூங்காற்று.......,)

மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ.!


இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒருபொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்


ஒரே வீணை.. ஒரே ராகம்..
ஒரே வீணை.. ஒரே ராகம்..


பாடல் : இளமையெனும் பூங்காற்று...
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
திரைப்படம் : பகலில் ஒரு இரவு
இசை : இளையராஜா
வரிகள் : கண்ணதாசன்

கருத்துகள் இல்லை: