18.12.11

கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால்
நெஞ்சிலோர் நிம்மதி


ஆ ...அ அ அ ஆ....


நாள்முழுதும் பார்வையில்
நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற..

                    ( கேளடி கண்மணி...... )


எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் சிறைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதற்பாடல்தான்


கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி


நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

                                                                           ( கேளடி கண்மணி...... )
                                                        
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா


ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால்த் தானே உண்டானது


கால் போன பாதைகள் நான் போனபோது
கைசேர்த்து நீதானே மெய்சேர்த்த மாது
                                                       
                    ( கேளடி கண்மணி...... )
பாடல் : கேளடி கண்மணி...
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
திரைப்படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி




4 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

பெயரில்லா சொன்னது…

இப்பாடலைப் பார்த்தேன் உடனே பிரதி பண்ணிவிட்டேன். வாழ்த்துகள். மிக்க நன்றி சகோதரி.
வேதா. இலங்காதிலகம்

என்றும் இனியவன் சொன்னது…

நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நொடியாய்ப் பிறந்து
மணித் துளியாய் மறைந்து
புது ஆண்டாய் மலர்ந்த
பொழுதே....
வறண்ட வாழ்வும்
தளர்ந்த கையும்
உன் வரவால்
நிமிர்ந்து எழுதே!
புது வருடம் பிறந்தால்
வாழ்வு மாறும்-என
ஏங்கித் தவிக்கும்
நெஞ்சம்..
உன் வரவே
நெஞ்சின் தஞ்சம்!
இறந்த காலக்
கவலை அதனை
மறந்து வாழ
பிறந்து வா வா
என் புதிய வாழ்வே
விரைந்து வா வா!
அழுதுவிட்டேன்
ஆண்டு முழுதும்
முயன்று பார்த்தேன்
விழுந்து விட்டேன்
அழுத நாளும் சேர்த்து
மகிழ்ந்து வாழ
எழுந்து நின்று
இமயம் வெல்ல
இனிய ஆண்டே
இன்றே வா வா
நன்றே வா வா!

அன்புடன் இனியவன்

என்றும் இனியவன் சொன்னது…

எனது தளத்தில்:
தனுசுக்கு போட்டியாக சிம்பு