11.1.12

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை 
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரோழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் 
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை 
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

                                       (என்கே எனது....)
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட 
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம்
அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே... கேட்குதே…
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
                                    (எங்கே எனது......)


படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
இசை :A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ்
பாடல் வரி : வைரமுத்து

44 கருத்துகள்:

Kumaran சொன்னது…

அருமையான கவிதை.மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான பாடல் இங்கே கண்டுகொண்டேன்..

Unknown சொன்னது…

ஆஹா! அருமை....
உள்ளுணர்வை தீண்டும் அற்புத இசையோடு கூடிய வரிகள் இவை..
பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரியாரே!

இதில் அந்தப் பாடலின் காநோளிகளையும் தேடிச்
சேர்த்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்குமே சகோதிரி...
செய்யுங்களேன்.

நன்றி...

பெயரில்லா சொன்னது…

nanry for a good song.
Vetha.Elangathilakam

மாலதி சொன்னது…

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை//அருமையான கவிதை

Murugeswari Rajavel சொன்னது…

வலைப்பூவைப் போல கவிதை!
தேனும்!பாலுமாய்!!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அருமை

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

Unknown சொன்னது…

அருமையான பாடல். இது போன்று பிடித்த பாடலை பதிவாக்கும் முயற்சியைத் தொடரலாமே?
உங்கள் பாணியில் விளக்கம் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

கோமதி அரசு சொன்னது…

அருமையான கவிதை பகிர்வு ராஜி.

தீபிகா(Theepika) சொன்னது…

இதயம் தொட்ட பாடல் வரிகள். இசை அழகுபடுத்திய அற்புத கானம்.

VijiParthiban சொன்னது…

அருமையான பாடல் வரிகள்
"எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...."
கண்டுகொண்டேன்...

மிக்க நன்றி அக்கா.

சிவகுமாரன் சொன்னது…

அருமையான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி

Boys சொன்னது…

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையததிற்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

Thozhirkalam Channel சொன்னது…

தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

கதம்ப உணர்வுகள் சொன்னது…

அன்பின் ராஜி,

அன்புடன் ரமணிசார் எனக்கு தந்த விருதினை தங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்...

அன்பு வாழ்த்துகள் ராஜி...

Unknown சொன்னது…

அருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்

vimalanperali சொன்னது…

மன்ம் கரைக்கிற அருமையான பாடல்/

Unknown சொன்னது…

அருமை மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

மாலதி சொன்னது…

அருமையான கவிதை

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

மன்ம் கரைக்கிற அருமையான பாடல்/

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…

வணக்கம்!



பாலும் தேனும் கலந்தனபோல்

பசுமைத் தமிழின் சொல்லினிக்கும்!

வேலும் வாளும் தோற்றோடும்!

வெல்லும் தமிழின் சீா்ப்படை..முன்!

ஆலும் வேலும் பல்லுறுதி!

நாளும் இரண்டும் சொல்லுறுதி!

நாளும் தொடா்ந்து தமிழிசையை

நன்றே இனிக்க இசைத்திடுக!

அன்புடன்

கவிஞா் கி. பாரதிதாசன்

Dino LA சொன்னது…

நல்ல பதிவு.

கவியாழி சொன்னது…

நல்ல தமிழ் பாட்டு .

ஹிஷாலி சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் பகிர்வுக்கு நன்றிகள் பல

தேன் நிலா சொன்னது…

படிக்க பரவசம்.. கேட்கக் கேட்க நவரசம்..
இசையிலும் பாடலிலும்...!!!

பகிர்வுக்கு நன்றி..

எனது வலைத்தளத்தில்: குறைந்த விலை பிராண்டட் செல்போன்களின் பட்டியல்

வாசித்துப் பயன்பெறுங்கள்..

தேன் நிலா சொன்னது…

அழகிய பாடல்கள்.... பாடலுக்கேற்ற இசையும் இனிமைகொள்ள செய்யும் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி.. மகிழ்ச்சி...

எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

கவியாழி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ad30days Network சொன்னது…

தமிழ் ப்ளாக் எழுத்தாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

உங்கள் பொன்னான நேரங்களை செலவு செய்து நீங்கள் எழுதும் ஒரு ஒரு பக்கங்களுக்கும் Ad30days Network உங்களுக்கு சன்மானம் வழங்கும். நீங்கள் செய்யவேண்டியது http://publisher.ad30days.in/publishers_account.php சென்று உங்கள் ப்ளாக் மற்றும் உங்களை தொடர்புகொள்ளும் விபரங்களை அளிப்பது மட்டும்மே. மேலும் விபரங்களுக்கு http://ad30days.in பார்க்கவும்

Kasthuri Rengan சொன்னது…

ஆகா எனக்கு மிகவும் பிடித்த கவிதை...

வாவ்..

ஒரு கொசுறு தகவல் ...
ஒருமுறை நண்பர் வீட்டில் பார்த்த பொழுது சானலை மாற்றிவிட்டு சொன்னார் எனக்கு ஐஸ் அழுதா பிடிக்காது...

தேன் நிலா சொன்னது…

மிக அருமை.. தங்களின் வலைத்தள தலைப்பைப் போல...

"தேனும் பாலும்"...

இனிமை..இனிமை...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

++++++++++++++++++

இன்று என்னுடைய வலையில்:

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

Kasthuri Rengan சொன்னது…

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

ஒருமுறை தொலைக்காட்சியில் வந்த பொழுது அவசரமாக மாற்றினான் என் நண்பன் கார்த்திக்

ஏன் என்று சொன்ன பொழுது அவன் சொன்னகாரணம் எனக்கு ஐஸ் அழுதா பிடிக்காது...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images

Swathi சொன்னது…

ஆஹா...

Yarlpavanan சொன்னது…

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

வலிப்போக்கன் சொன்னது…

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை-----அது எனக்கும் பொறுந்தும்

Unknown சொன்னது…

மகளே ராஜி உன்னுடைய வலையைத் தட்டினால் என் கணினியில் நான்கைந்து பதிவுகளாக ஏதோ ஒரு வலையின் பெயர்வந்து அதும் சுற்றிக் கொண்டே இருக்கிறது !முன்பும் குறிப்பிட்டேன் கவனிக்க வில்லையே

kowsy சொன்னது…

அற்புதமான வரிகள். பாடலாய் கேட்டேன். வரிகளில் பார்க்கும் போது மனத்தைக் கவர்கின்றது

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

மிக பொறுமையாக ரசித்து, தோய்ந்து, கரைந்து அந்தப் பாடலின் இசையை சுமையாக்கி விட்டீர்கள் இதற்கப்புறம் !

ஹிஷாலி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஹிஷாலி சொன்னது…

புரிதல் இல்லா நட்பு ஒரு நாளில் கோபமாக மாறி பெரும் விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது தங்கள் கருத்திற்கு நன்றிகள் அக்கா அதே போல் எனக்கு தெரிந்து எழுத்துப்பிழை இல்லையே ! தவறாக என்ன வேண்டாம் அக்கா இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்
நன்றி

சீராளன் சொன்னது…

அட்டகாசமான இசையும் பாடல் வரிகளும்

அருமை அருமை

Muthu சொன்னது…

உங்களின் பதிவு மிகவும் ரசிக்கும் படி இருந்தது என்னுடைய புதிய வலைதளம் https://tamilkeywords.blogspot.com/?m=1 உருவாக்கி உள்ளேன் Tech news மற்றும் daily life style பதிவு செய்கிறேன்

Ranjith Ramadasan சொன்னது…

மிகவும் அருமை ..நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/