24.8.11














சில பாட்டுக்களை கேட்கும்போது இதயத்திற்கு யாரோ கைவிட்டு பிசைவது போலிருக்கும். அதுப்போன்ற பாடல்களில் ஒன்றுதான் கருப்புசாமி குத்தகைக்காரர் படத்தில் வரும் உப்புக்கல்லு... 



உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து -ஏங்
க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து
ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து – நீ
த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து
தேதித் தாளைப் போல வீணே
நாளும் கிழிய‌றேன் -நான்
தேர்வுத் தாளை க‌ண்ணீ ரால
ஏனோ எழுதுறேன்
இது க‌ன‌வா? இல்லை நிஜ‌மா?
த‌ற்செய‌லா? தாய் செய‌லா?
நானும் இங்கு நானும் இல்லையே
                                                            (உப்புக்கல்லு....,) 


ஏதும் இல்லை வண்ண‌ம் என்று
நானும் வாடினேன் -நீ
ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய்
என்னை மாத்துன‌
தாயும் இல்லை என்று உள்ள‌ம்
நேற்று ஏங்கினேன் -நீ
தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால்
நெஞ்சத் தாக்கின
க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக்
காய்ப்ப‌ட்ட‌வ‌ள் – உன்
க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால்
ந‌ன்மைய‌டைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி
சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள் – உன்
நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால்
உண்மைய‌றிகிறேன்
                                               (உப்புக்கல்லு ......,)



மீசைவைத்த‌ அன்னை போல‌
உன்னைக் காண்கிறேன் – நீ
பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம்
வேத‌மாகுதே பாழ‌டைந்த‌ வீடு போல‌
அன்று தோன்றினேன் -உன்
பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால்
கோல‌ம் மாறுதே
க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு
ஆன‌ போதிலும் – உன்
பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை
என‌து விழிகளே
தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு
ஆன‌ போதிலும் – க‌ண்
நாளும் இங்கு தீண்ட‌வில்லை
உன‌து நினைவிலே
                                       (உப்புக்கல்லு....,)


படம்: கருப்பசாமி குத்தகைக்காரர்,
நடிகர்கள்: கரண், நடிகை பெயர் தெரியலை.
பாடியவ: பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர்: யுகபாரதி
இசை: தீனா.


 


9 கருத்துகள்:

Unknown சொன்னது…

உண்மைதான் சகோ இந்தப்பாட்டு எனக்கும் சில சலனங்களை ஏற்படுத்தியது...பகிர்வுக்கு நன்றி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

பாடலாகக் கேட்கையில் புரியாத
பல விஷயங்கள் வரிவடிவில்
படிக்கையில்தான் தெரிகிறது
நல்ல பாடலைப் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாடல் வரிவடிவில் படிக்கையில் மனம் கனத்தது. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான தேர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
சகோ ..............

மாலதி சொன்னது…

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…

ஆம் தோழி! இந்த பாடலை கேட்க்கும் ஒவ்வொரு முறையும் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிடும். என்னது உணர்ச்சிகளுடன் மிக நெருக்கமான பாடல்களுள் ஒன்று இது.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...! என் தளத்திற்கு வந்து கருத்துரை சொன்னதற்கு மிகவும் நன்றி இந்த தளமும் தங்களது தான் என்பதை தெரிந்து கொண்டேன். நான் பாட்டுக்கு ரசிகன். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். (இந்த தளத்திலும் Email Subscription வைக்கலாமே.) தொடருங்கள். வாழ்த்துக்கள்.நன்றி சகோதரி!

arul சொன்னது…

this is a superb song