13.11.10

சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
(சொன்னது....,)

மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன்
என்றதும் நீ தானே
இன்று சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே...,

(சொன்னது ...,

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
(அன்று சொன்னது...,

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடியவர்: பி.சுசிலா,
நடிகைகள்: முத்துராமன், தேவிகா
எழுதியவர்: கண்ணதாசன்


10.11.10

அவள் பெயர் தமிழரசி

காதல் பிரிவின் வலியை அருமையாய் சொல்லி இருக்கும் பாடல் படம். ஒரு வயலின் கதறுவதையே தனிமையில் இருக்கும்போது தாங்க முடியாது. இதில்
பல வயலின் கதறுவதை பின்னிரவில் கேட்கும்போது கண்ணீர் அரும்புவதை தடுக்க இயலாது.


வடக்கா, தெற்கா,
கிழக்கா, மேற்கா,
எந்த திசை போன புள்ள
என் நெஞ்சுக் கூடுத் தாங்கவில்ல.
இறைத் தேடிப் போன பறவை நீ
இன்னும் கூடு வந்து சேரலையே.

என் இருவிழி கரையுதடி
சொன்னாலும் கேட்கலையே..,
(வடக்கா...,)

நீ முகம் பார்க்கும் கண்ணாடில
நெத்திப் பொட்டு இருக்கு,

நீ குளிச்ச இடத்துலதான்
மஞ்சள் துண்டு கெடக்கு.

நீ விட்டத்துல சொருகிவச்ச
கோழி றெக்க இருக்குதடி,
நீ சிக்கெடுத்து போட்ட முடி
காலை சுத்தி கெடக்குதடி
என்னை சுத்தி எல்லாமே
உன்பேரத்தான் சொல்ல,
என்னை ஒத்தையில விட்டுப்புட்டா
நான் எங்க செல்ல?? நான் எங்க செல்ல?
(வடக்கா? ...)

நீ விரல் நீட்டி கொஞ்சம் பேசையில
வான வில்லும் உதிக்கும்..,
நீ நடந்த தடத்துலதான்
சொர்க்கவாசல் திறக்கும்..,
நீ எந்த திக்கு தெரியாமல்
துன்பப்பட்டு எரிஞ்சுப்புட்டேன்
இந்த பாவத்த தீர்த்துடத்தான்
எந்த ஆத்துலக் குளிக்கப் போவ
நான் அழுதக் கண்ணீரில்
நாளுக் காணி நிலம்
நிறைஞ்சிடுமே
உழுது விதைச்சாலும்
முப்போகம் விளஞ்சிடுமே
நல் முப்போகம் விளஞ்சுடுமே
(வடக்கா?...)

27.9.10

கண்ணதாசனை மிஞ்சிய கவிஞர் இல்லை என்பதை என்னை உணர வைத்தப் பாடல். ஒரே வார்த்தை அது தகப்பனுக்கும், காதலனுக்கும் பொருந்தும் வகையில் அமைத்தப் பாடல்.
****************************************************************

காதலன்: அவள் பறந்து போனாளே,
என்னை மறந்துப் போனாளே
நான் பார்க்கும்போது கண்களிரண்டை
கவர்ந்துப் போனாளே
(அவள்....,)
என் காதுக்கு மொழியில்லை,
என் நாவுக்கு சுவையில்லை,
என் நெஞ்சுக்கு நினைவில்லை,
இனி நிழலுக்கும் உறக்கமில்லை,
என் நிழலுக்கும் உறக்கமில்லை..,
(அவள்...)

தந்தை: இந்த வீட்டிற்கு விளக்கில்லை
சொந்த கூட்டிற்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை,
இனி ஆறுதல் மொழியில்லை
(அவள்,..,)

காதலன்: என் இதயத்தைப் பூட்டி வைத்தேன்,
அதில் எனையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே..
தந்தை: அவள் எனக்கா மகளானாள்?,
நான் அவளுக்கு மானானேன்.
என் உரிமைத் தாயல்லவா?
என் உயிரை எடுத்துச் சென்றாள்
(அவள்...,)

படம்:
நடிகர்கள்; தந்தையாக சிவாஜியும், காதலனாக முத்துராமனு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: அப்பாவாக டி.எம்.சௌந்தரராஜனும், காதலனாக பி.பி.ஸ்ரீநிவாசும்.எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் என்றாலே தனி பிரியம் உண்டு. அவர் குரலில் மெலோடிஸ் என்றால், கரும்பு தின்ன கூலியா வேண்டும்? அவரே இசையமைத்து அவர் பாடிய பாடல் ஒன்று.


வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ?
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை.
(வண்ணம்....,)

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாசையில்லை,
சுவாசிக்க ஆசையில்லை

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாசையில்லை,
சுவாசிக்க ஆசையில்லை

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை,
தள்ளி தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை.
(வண்ணம்....,)


நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திர பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடிநங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திர பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடிகன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்....,
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவிக் கொண்டு நான் நடப்பேன்.
(வண்ணம்...,)
18.9.10

உற்சாகம்

விடலைப் பருவத்துக் காதலை சொன்னப் பாடல். மிதமான இசையில் மனதை  வருடும் பாடல்.
-------------------------------------------
 ஆனந்தராகம் கேட்கும் காலம்,
கீழ்வானிலே ஒளிதான்  தோன்றுதே,
 ஆயிரம் ஆசைகள் என் நெஞ்சம் பாடாதோ,
              (ஆனந்த......,)                                                     
துள்ளி வரும் உள்ளங்களில்
தூது வந்து தென்றல் சொல்ல
தூவும் எங்கும் இன்பத்தின்
 ஆனந்த தாளங்களை ,
வெள்ளி மலை கோலங்களை
அள்ளிக்  கொண்ட  மேகங்களை,
காணும் நெஞ்சில்  பொங்கட்டும்
சொந்தத்தின் பாவங்கலை   
பள்ளமின்றி உள்ளங்கள் துல்லிஎழ
பற்றிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல எழ
ராகங்கள் பாட, தாளங்கள் போட
வானெங்கும் போகாதோ,
                      (ஆனந்த.......)

வண்ண வண்ண எண்ணங்களும்,
வந்துவிழும் உள்ளங்களும்
வானின்  நீரில் ஊர்வலம் போகும் காலங்களே
சின்ன, சின்ன மின்னல்களும்
சிந்தனையின் பின்னல்களும்,
சீரும் போது தோன்றிடும்  ஆயிரம் கோலங்களே
இன்றுமுதல் இன்பங்கள் பொங்கிவரும்
இந்தமணம் எங்கெங்கும் சென்று வரும்.  
காவிய ராகம் காற்றினில் கேட்கும்,
ஆனந்தங்கள் ஆரம்பம் 
                         (ஆனந்த....,)

படம்: பன்னீர் புஷ்பங்கள்,
நடிகர்கள்: சுரேஷ், உமா,
இசை: இளையராஜா,
பாடியவர்: சசிரேகா,
 

உற்சாகம்

அருமையான இசை, சிலேடையுடன் கூடியபாடல் வரிகள். உற்சாகமான தருணத்தில் முணுமுணுக்கும்  பாடல்களில் இதுவும் ஒன்று.

கண்களும் ஏங்குது ,
காதலும்  பொங்குது அம்மாடியோ,
இருமனம் ஏங்குது,
ஏனின்னும் தயங்குது  அம்மாடியோ,
பொத்திவச்ச ஜாதி முல்லை
பொத்திவச்ச ஜாதிமுல்லை,
துணிப் போட்டு மறைச்சால்கூட
வாசம்தான் வீசுது  வெளியே.
வெளிவேஷம்  போட்டால்கூட
பாசம்தான் தெரியுது வெளியே
காதலிது பொல்லாதது போடி,
கண்ணாலதான் கதைப் பேசுது  வாடி,
                  (கண்களும்...,)
கோழிக்குதான் தீனியை வெச்சான்
தேவிக்குதான் ஜாடைய வச்சான்
மிளகாயை காயவச்சா
விழியம்பை பாயவச்சா
பாதையில போகையில
பாதிக் கண்ணால் பார்க்கையில
மனசுந்தான் உடஞ்சுதடி ,
கொலுசுந்தான் கழண்டதடி
எடுத்ததுக் கொலுசை,
கொடுத்தது மனசை,
எடுத்ததுக் கொலுசை
கொடுத்தது மனசை..,
                 (கண்களும்...,)

 காயவச்ச தாவாணி காத்துலதான் பறந்ததடி
காளையின்மேல் விழுந்ததடி,
காதலுந்தான் வளர்ந்ததடி,
பூவை நீ வைக்கையிலே  ஓடையிலே விழுந்ததடி
கைநீட்டி எடுக்கையிலே ஓடித்தான் போனதடி
மிதந்தது ரோசா,  
கவர்ந்தது  ராசா

மிதந்தது ரோசா,  
கவர்ந்தது  ராசா

ஏக்கம்

தானே  தேர்ந்தெடுத்த வாழ்க்கை சரியாக அமையாமல் போனதால்,
சேரவும்  முடியாமல், விலகவும்  முடியாமல் பாடும் பெண்ணின் மனோநிலையும்,  உன் நிலைக்கு நான் காரணமல்ல  என்று சொல்லும் ஆணின்  பதிலும் இணைந்த பாடல். இதில் காதல், சோகம், ஏக்கம் அனைத்தும் உள்ளது ..,
------------------------------------
பெண்: ஆரிராரோ, ஆரிராரோ,
              ஆரிராரோ,ஆரிராரோ
              சின்ன சிறுக் கிளியே
             சித்திரப் பூ விழியே             
             அன்னை மனம் எங்கும்
             தந்தை  மனம் தூங்கும்
             நாடகம்  ஏனடா?
             நியாயத்தைக் கேளடா?    
                                        (சின்னஞ்....,  )
             சுகமே     நினைத்து,
             சுயவரம் தேடி ,
             சுழல்மேல் தவிக்கும்
             துயரங்கள் கோடி,
             மழைநீர் மேகம்
            விழிகளில் மேவும்
            இந்த நிலை மாறுமோ,
            அன்பு வழி சேருமோ?
            கண்கலங்கி பாடும் எனது பாசம்
            உனக்கு வேஷமோ?
            வாழ்ந்தது போதுமடா
            வாழ்க்கை இனி ஏன் ?
                          
ஆண்:   சின்னஞ்  சிறுக் கிளியே
             சித்திரப்பூ விழியே
             உன்னை எண்ணி நானும்
             உள்ளம் தடுமாறும்
            வேதனைப்  பாரடா? 
            வேடிக்கை தானடா?
                                   (சின்னஞ் ...,)  
            மயிலே உனை நான் மயக்க்கவுமில்லை,
           மனதால் என்றும்  நான் வெறுக்கவுமில்லை,
           எனை நீ தேடி இணைந்ததுப் பாவம்,
           எல்லாம் நீயே எழுதியக் கோலம்,
           இந்த  நிலைக் காணும்பொழுது
           நானும்  அழுது    வாழ்கிறேன்
           காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ?
                                 (சின்னஞ்....,)
படம்: முந்தானை முடிச்சு,
நடிகர்கள்: கே. பாக்கியராஜ், ஊர்வசி
பாடியவர்கள்: எஸ் .பி.பாலசுப்ரமனிடம், எஸ்.ஜானகி .
இசை: இளையராஜா.
  

 

17.9.10

தென்றல்

தமிழ் சினிமாவில் பெண்களின் காதலை கண்ணியமாக சொன்ன திரைப் படங்கள் மிகக்குறைவு. அதில் ஒன்று. கதாநாயகன் தனக்குக் கிடைக்காவிட்டாலும், அவனை எண்ணி, எண்ணி உற்சாகத்தோடு படும் பாடல்.
-----------------------------------------------

ஏ பெண்ணே, பெண்ணே
என்னாச்சு?
ஏனிந்த உற்சாகப் பெருமூச்சு?

மடைத் தாண்டும்,
கரைத் தாண்டும் ,
படைத் தாண்டும் ,
தடைத் தாண்டும்,
நதியாக, நதியாக ஆனேனே

கடலுக்கும், மணலுக்கும்
ஓயாத தூதாக
நதி போடும் அலையாக ஆனேனே

வெள்ளத்தில் மீனானேன்
வேகத்தில் மானேன்
கவிப் படும் காற்றானேன்
கரையெல்லாம் ஊற்றானேன்
        (ஏ பெண்ணே.....,)


என் சோட்டுப் பெண்களெல்லாம் வாக்கப்பட்டுப் போகையிலே,
எட்ட நின்று கண்விரிய சன்னல் வழி பார்த்திருந்தேன்
தாலியில்லை, மாலையில்லை, காலில் ஒரு மெட்டியில்லை,
தோரணங்கள் கட்டவில்லை, தோழிப் பெண்கள் பக்கமில்லை.
கதையாய் ஆண்டாளை எல்லாரும் படித்தார்கள்,
அவளாய் வாழ்கின்ற பெரும்பேற்றை அளித்தாய்
உன் வீட்டைத் தேடி என்றும் என் அன்னம் வந்ததில்லை
நான் சொல்லும் சேதி ஏந்தி, என் தென்றல் வந்ததில்லை..,,
 என் ஆசை நினைவை அள்ளி,அள்ளி மேலே ஊற்றிக் கொள்வேன்
இனி இன்னோர் ஜென்மம் என்றால்கூட நான் இதேப்போல் வாழ்வேன்...,

                                                                (ஏ பெண்ணே...)

புத்தம்புது சேலையிலே  நானிருந்தேன் அன்றிரவு..,
வெக்கத்திலே தத்தளித்து வேர்த்துக்கொட்டும் வெண்ணிலவு..,
நகரும் நிழலோடுப் போராடி நின்றேன்
நதியின் துளியொன்றை மகனாகக் கொண்டேன்
இது எங்கோ செல்லும் பாதை
நான் தீயை தின்ற சீதை  என் கையில் கொஞ்சும் மழலை
நான் வேண்டிப்  பெற்ற சிலுவை
என் நெஞ்சுக்குள்ளே  ஆடும்ஆடும் நில்லா ஊஞ்சல் நீயே
ஒருபோதும் எனை நீங்கி செல்லா நீயும் இன்னோர் தாயே
                                                                                      (ஏ பெண்ணே...,)

படம்:  தென்றல்
இயக்குனர்: தங்கர்பச்சான்
நடிகர்கள்; பார்த்திபன்,உமா
இசை: தெரியவில்லை

ஆவாரம்பூ

திருமணமான  பெண்ணின் காதலை கண்ணியமாக  சொன்னதால்
இப்பாடலும், படமும் பிடிக்கும்.

ஆவாரம்பூ அந்நாளிலிருந்தே
யாருக்குக் காத்திருக்கு....,
அந்திப் பகல்
மழை வெயில் சுமந்தே
 உனக்காகப் பூத்திருக்கு சொந்த வேரோடுத்
தான்  கொண்டக் காதலினை
அது சொல்லாமல் போனாலும் தெரியாதா?
                                             (ஆவாரம்பூ..,)

காற்றிலாடித் தினந்தோறும்
உனது திசையைத் தொடருதடா.....,
குழந்தைக்கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தேக்  கிடக்குதடா...,
நெடுநாள் வந்த  நெருக்கம்
நினைப்பில் அதுக் கிடக்கும்..,
சருகுகள் சத்தம் போடும்,
தினம்  சூழ்நிலை  யுத்தம் போடும்
அதன் வார்த்தை  எல்லாம் மௌனமாகும்...,      
                             
                                    (சொந்த வேரோடு...,)

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றைக் காலில் நிற்குதடா..,
மாலையாகித் தவழ்ந்திடவே  
உனது மார்பைக் கேட்குதடா,
தனியில் அதுக் கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்
அதன் வாசங்கள்  எல்லாம் நீதான்..,
நீயும் விட்டுச்  சென்றால் பட்டுப் போகும்..,

                                      (ஆவாரம்பூ..,)


படம்: பூ
நடிகர்கள்: ஸ்ரீகாந்த், பார்வதி மேனன்,
இயக்குனர்: சசி
இசையமைப்பாளர்: S.S.குமரன்
பாடியவர்: சின்மயி
ஏக்கம்

ஒரு பெண்ணின் காதலின் ஏக்கம் பெரும்பாலும் படங்களில் விரகதாபத்துடன்தான் காட்டுவார்கள். ஆனால், இப்படத்தில் அப்படியல்லாமல் கண்ணியத்துடன் காட்டியதாலேயே இப்பாடல் பிடிக்கும்.
அதுமட்டுமல்லாமல் என் மகள் தூயாவும் இந்தப் பாடலை  
முணுமுணுப்பதாலேயே இப்பாடல் பிடிக்கும்.
-----------------------------------
யமுனை ஆற்றிலே
ஈரக் காற்றிலே 
கண்ணனோடுதான் ஆட
பாதைப்   பார்த்திட,
பார்வைப் பூத்திட
பாவை ராதையோ வாட, 
இரவும் போனது,
பகலும் போனது
மன்னனில்லையேக் கூட
இளையக் கன்னியின் இமைத்திடாதக் கண்
இங்குமங்குமேத் தேட
ஆயர் பாடியில் கண்ணனில்லையோ
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா
             (யமுனை....,)           
படம்: தளபதி
நடிகர்கள்: ரஜினிகாந்த், ஷோபனா,
இசை: இளையராஜா.

15.9.10

சோகம்

ஒரு கணவன் தன் மனைவி இறப்புக்கு எவ்வாறு வருந்துகிறான் என்பதை  விளக்கும் பாடல்.
இந்த பாடலைப் போல் தனக்கும் இதுப் போல் கணவன் அமைய மாட்டானா? என (90களின் காலகட்டத்தில்) பெண்களை ஏங்க  வைத்த பாடல். எனக்குத் தெரிந்தப் பெண் ஒருத்தி  இதுப் போல் என் வீட்டுக்காரரும் எனக்கு செய்யணும் னு சொல்லுவாங்க.
------------------------------------
சோலைப் பசுங்கிளியே
 சொந்தமுள்ளப் பூங்கொடியே
ஈச்ச இளங்குருத்தே
என் தாயி சோலையம்மா
கோடித் திரவியமே                                 
 வந்தது வந்தது ஏன்?
கொள்ளைப் போனது போனது ஏன்?
 ஆவித் துடிக்க விட்டு
சென்றது, சென்றது ஏன்?
விட்டு சென்றது, சென்றது ஏன்?

கண்ணுப் படப் போகுதுன்னு
பொத்தி வச்சப் பூங்குயிலே
மண்ணுப் பட்டுப் போகுமென்று
நெஞ்சு இன்று  தாங்கலியே
வாங்கி வந்த மல்லி இன்னும் வாசமின்னும் போகலியே
பந்தகாலுப் பள்ளமின்னும் மண்ணெடுத்து மூடலியே
நீ வாழ்ந்த காட்சியெல்லாம் தேடுகின்றேனே,
நானிங்கு நாதியின்றி வாடுகின்றேனே
                                         (சோலைப் ....,)
தங்கத்துலத் தாலிப் பண்ணிப்
தங்கத்துக்குப்   போட்டேனே
தாங்கியவள் வாழவுமில்லை
தட்டுக் கேட்டுப் போனேனே.
தங்கநிற தாமரையை
செங்கரையான் தீண்டிடுமோ?
மஞ்சமுக மல்லிகையை
மங்கரையான் மாத்திடுமோ,
கற்பூரக் கட்டி ஒண்ணு காத்துலப்  போனதடி,
செந்தூர வாழை ஒன்னு
சேத்துல சஞ்சதடி,
                  (சோலை....,)

படம்: என் ராசாவின் மனசுல,
நடிகர்கள்: ராஜ்கிரண், மீனா,
இசையமத்து பாடியவர்: இளையராஜா.

குத்துப் பாட்டு

என் மகிழ்ச்சியானத் தருணங்களில் நான் விரும்பிக் கேட்கும் ஒரு குத்துப் பாடல்
கனவும், புரிந்துக் கொள்வாளா என்று ஏக்கம்? உற்சாகம்,காதலும் இணைந்த பாடல். மீண்டும் இதுப்போல் ஒரு பாடல் T .R  மூலம் நமக்குக் கிடைக்குமா?
-----------------
கூடையிலேக் கருவாடு
கூந்தலிலேப்  பூக்காடு,
என்னடிப் பொருப்பாயா?
என் பொருத்தம் இதுப்போலா?
தாளமில்லாப் பின்பாட்டு,
ஆஆஆஆஆஆ
தாளமில்லாப் பின்பாட்டு,
தட்டுக்கெட்ட என் கூத்து,
என்னுயிர்  ரோஜா எங்கடிப் போன
மாமனைக் கண்டு ஆடுதடி இங்கு
அம்மாளு அம்மாளு ,

கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,
கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,

அல்லிவட்டம், புள்ளிவட்டம்
நானறிஞ்ச நிலாவட்டம்,
அல்லிவட்டம், புள்ளிவட்டம்
நானறிஞ்ச நிலாவட்டம்,
பார்ப்பது பாவமில்லை, புடிப்பது சுலபமில்லை
புத்திக் கெட்ட விதியாலே ஆஆஆஆ
போனவதான் என் மயிலு,

கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,
கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,

என்னுயிர்  ரோஜா எங்கடிப் போன
மாமனைக் கண்டு ஆடுதடி இங்கு
அம்மாளு அம்மாளு ,

ஆயிரத்தில் நீயே ஒன்னு
நானறிஞ்ச  நல்லப் பொண்ணு
மாயூரத்துக் காளையொன்னு
பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடிக் காவிரி ஆஆஆஆ
 ஓடாதடிக் காவிரி 
உன் மனசுல யாரோடி

என்னுயிர்  ரோஜா எங்கடிப் போன
மாமனைக் கண்டு ஆடுதடி இங்கு
அம்மாளு அம்மாளு ,
கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,
கூவுற கோழிக் கூவுற வேலை
ராசாதி ராசன் வாரண்டி முன்னே,
என்னுயிர்  ரோஜா எங்கடிப் போன
மாமனைக் கண்டு ஆடுதடி இங்கு
அம்மாளு அம்மாளு ,

படம்: ஒரு தலை ராகம்,
பாடியவர்: மலேசிய வாசுதேவன்
எழுதி இசையமைத்தவர்: T .ராஜேந்தர்.
நடிகர்கள்: சங்கர், சந்திரசேகர்,

உறவுகள்

தத்துவம்
ஒரு இக்கட்டான நேரத்தில்தான் உண்மையான உறவுகளை உணர முடியும்
எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியொரு சூழ்நிலை எனக்கு சமீபத்தில்தான் வாய்த்தது. அதைத்  தந்த இறைவனுக்கு நன்றி. அதுப் போல் ஒரு சூழலில் வந்த பாடல் என்பதால் இதைப் பிடிக்கும்.
---------------------------------------------

சொந்தம் பதினாறு உண்டு
கூட, உறவாட,
யாருமில்லைக் கையெழுத்துப் போட
உண்மையிலே இங்கே  ஒரு சொந்தமின்னு சொல்ல
 சட்டப்படிப் பார்த்தா ரத்த சம்பந்தங்கள் அல்ல.
ஒரு ஜீவன் அலைப் பாய...,
                     (சொந்தம்...,)
அன்னை வழி, தந்தை வழி
அத்தை வழி, மாமன் வழி வந்ததுதான்
சொந்தமென்று யார் சொன்னதம்மா?
அன்புக்கொண்ட உள்ளமெல்லாம்
நேசம் வச்ச நெஞ்சமெல்லாம்
 சொந்தத்திலும் சொந்தகமென்று ஊர் சொல்லுமம்ம்மா
என்னாளுமே  இங்கே  நல்ல மனம்
 கொண்ட எல்லாருமே ஒரு சாதி சனம்.
கண்ணீரில் பாசங்கள் எந்நேரமும் நீராட,
தெய்வந்தான் கண்பார்க்க கையேந்தி போராட,
                                                       (சொந்தம்.....,)

போட்டதொரு நாடகந்தான், பெண்ணொருத்தி காரணந்தான்,
மேளம் கொட்டி மாலையிட நாள் வந்திடனும்,
மாமன் போட்டக் கையெழுத்தில் , மாப்பிள்ளையின் தலையெழுத்து,
நல்லபடி மாறியதை ஊர் கண்டிடணும்,
உயிரோடுதான் இங்கு போராடுது, புயல் காற்றிலே சின்னப்  பூ வாடுது,
பூச்சுடும் நாள் பார்த்து பெண்பாவை நின்றாலே
பெண்பாடு என்னாகும் பூ வாடி நின்றாலே,
                                             (சொந்தம்...,)
படம் : சொந்தம்,
நடிகர்கள்: மோகன்,

ஏக்கம்

காற்றுக் கூட தமக்குள் இருக்கக்கூடாது நினைத்து ஏங்கும் பெண்ணின் மனநிலையை உணர்த்தும் அழகானப்   பாடல். எல்லோரும் பல ஜென்மம் சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், கதாநாயகனுடன் சேர்ந்த இந்த ஜென்மமேப் போதும் ஈரேழு  ஜென்மம் வாழ்ந்த  திருப்தியை அவள் அடைந்துவிட்டாள்  என்றுக் கூறும் பாடல். அதனாலேயே எனக்குப்  பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.
-----------------------------------------------------------
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திப் பகல் உன்னுடனே நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம், உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்துலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்.
                              (அக்கம்..,)

நீப் பேசும் வார்த்தைகள்  சேகரித்து,
செய்வேன் அன்பே ஒரு அகராதி,
நீத் தூங்கும் நேரத்தில் தூங்காமல்,
பார்ப்பேன் தினம் உன் தலைக் கோதி,
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காரின் வெப்பம் சுமப்பேன்.
கையோடுதான் கைகோர்த்துதான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்,
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
                                      (அக்கம்...,)
நீயும் நானும் சேருமுன்னே
நம் நிழல் ரெண்டும் ஒன்று கலக்கின்றதே ,
நேரம் காலம் தெரியாமல்
நிஜமென்று விண்ணில் மிதக்கின்றதே,
உன்னாலிங்கு  பெண்ணாகப் பிறந்ததன்
 அர்த்தங்கள் தெரிந்துக் கொண்டேன்.
உன் தீண்டலில் என் தேகத்தில்
 புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும்
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்.

படம்: கிரீடம்,
நடிகர்கள்: அஜீத், த்ரிஷா

பிரிவு

அடைந்துவிடுதல் என்பது சுகந்தான், ஏன் மறந்தும்கூடப் போகலாம், ஆனால் இழந்துவிட்டால்...,???
தன்   காதலின் கடைசித் தினத்தை எண்ணும் மனக்குமுறலை  இதைவிடவா வேறு சொல்லால் உணர்த்திவிட முடியும்?
எனக்கு இந்த பாடல் எழுதி, இசையமைத்தவர் T.ராஜேந்தர்.
இப்போ எங்கே இந்த T .R ?
++++++++++++++++++++++++++
திருமணந்தான் நடக்குதுங்க
ஊருசனம் மகிழுதுங்க,
ஏதோ சில மனங்கள் தூக்குதுங்க.
அதுமட்டுமங்கு அழுவுதுங்க
அழுவுதுங்க அழுவுதுங்க ..,

அட காதலிச்சாப் போதாது 
அதை மூடிவைக்கக் கூடாது.
கல்யாணந்தான் சொர்க்கத்துல
நிச்சயக்கப்படுதாம்.
பத்திரிகை மட்டுமிங்கே
அச்சடிக்கப்படுதாம்.
                             (அடக் காதலிச்சா...,)
பொல்லாத விதியே, செய்யாத சதியே

ஊரையும்தான் கூட்டுறாங்க,
ஊர்வலம்தான் நடத்துறாங்க,
காதலிச்சோர் தவிக்குறாங்க,
காயத்தைதான் மறைக்குறாங்க.
வானவேடிக்கை வேட்டு வெடிக்குது
காதல்மாளிகை கேட்டு நொறுங்குது.
மேளங்கள் முழங்குதுங்க ,
ரத்தநாளங்கள் துடிக்குதுங்க
மேளங்கள் முழங்குதுங்க ,
ரத்தநாளங்கள் துடிக்குதுங்க
பன்னீரைத்  தெளிச்சு வரவேற்பு நடக்குதுங்க.
கண்ணீரில் குளிச்சு நெஞ்சங்கள் கரையுதுங்க
,                     (அடக் காதலிச்சா..,)

நாதஸ்வரம் ஊதுறாங்க, மந்திரங்கள் ஓதுறாங்க,
மாலையத்தான் மாத்துறாங்க, தாலியைத்தான் கட்டுறாங்க
அம்மி மிதிச்சுதான் சடங்கு நடக்குது,
அன்பை மிதிச்சுதான் விதியும் சிரிக்குது,
அக்கினியும் எரியுதுங்க
காதல் அத்தனையும்
கருகுதுங்க..,
பொருந்தாத உறவை ஊரும்தான்  வாழ்த்துதுங்க,
பொண்ணோட மனசு ஊமையாகி வாடுதுங்க.
                         ( அடக் காதலிச்சா ...,)

படம்: ஒருதாயின்சபதம்,
நடிகர்கள்: T .ராஜேந்தர்,
எழுதி இசையமைத்தவர்: T .ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

காதல்

.
சாதாரண வரிகள், எளிமையான் இசை, ஆனாலும் ஏனென்றுத் தெரியாது.  இந்த பாடல் மிகவும்   பிடிக்கும்

ராஜராஜசோழன் நான்,
எனை ஆளும் காதல் தேசம் நீதான்,
ராஜராஜசோழன் நான்,
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே, காதல் தேனே
கை வீசும்போது பாயும் மின்சாரமே
மண்மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாசப் பூமியிங்கு உண்டானதே.
                              (ராஜராஜ..,)
கண்ணோடுக் கண்களேற்றும் கற்பூரத் தீபமே
கைநீட்டும்போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடைமேலே
ஓரங்க நாடகம்.
இன்பங்கள் பாடம்  சொல்லும் என்  தாயகம்.
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்.
அங்கங்கு ஆசைத்தீயில் நான் வேகிறேன்.
மூன்றாவது மோகனம்
என் காதல் வாகனம்,
செந்தாமரை, செந்தேன்மழை
என் ஆவி நீயே தேவி....,
                 (ராஜ ராஜ...,)

கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்  சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டுக்
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கலேன்று போய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி  செல்வாக்கிலே 
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே
நீராடும் நேரமே 
 புல்லாங்குழல் தள்ளாடுமே
போன்மேனிக்கே ஹாய் ராணி
                         (ராஜராஜ....)

படம்: ரெட்டைவால் குருவி
நடிகர்கள்:  மோகன், ராதிகா, அர்ச்சனா,
இசை: இளையராஜா.

14.9.10

பிரிவு

காதலியைப் பிரிந்து வாடும் காதலனின் மனநிலையை காட்டும் பாடல
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்,
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்,
உறங்கும்போது பேசுகிறேன்.
                     (பல்லவி...,)
இந்த ராகம், தாளம், எதற்காக?
உயிரே உனக்காக, உயிரே உனக்காக,
உயிரே உனக்காக, உயிரே உனக்காக..,
ம்ம்மம்மம்ம்ம்ம் , ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்,
ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம், ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

படம்:  உயிரே உனக்காக
நடிகர்கள்: மோகன், நதியா
இசை: இளையராஜா.
பாடியவர்: சுரேந்தர்.

தவிப்பு

தன் மரணத்தை நெருங்கும் ஒரு கணவன் தன் மனைவியுடன் தான் வாழ்ந்த காலத்தை  எண்ணியும் அவளை விட்டுப் பிரியப் போவதை நினைத்தும் பாடும் பாடல். இதுவும் என்னளவில்  காலத்தை வென்று ஏங்க வைக்கும் பாடல்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.
என் கண்ணில் பாவையன்றோ
என்னுயிர் நின்னதன்றோ.
               (உன் ....,)

உன்னைக் கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி.
பொன்னை மணந்ததால்
சபையில் புகழும் வளர்ந்ததடி.            
          (உன்...,)
காலச் சுமைத்தாங்கிப் போலே
மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்,
அதில் என் விம்மல் தணியுமடி.
ஆலம்விழுதுப் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன?
வேரென நீயிருந்தாய் அதில்
 நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்.
                                      ( உன்...,)
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ
என்னைப் பேதைமை செய்ததடி.
பேருக்குப் பிள்ளையுண்டு,
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்?
உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்.

படம்: வியட்நாம் வீடு
நடிகர்கள்: சிவாஜி கணேசன், பத்மினி
பாடியவர்: T.M.சௌந்தரராஜன்.
இசை. K.V.மகாதேவன்

காதல்

ஒரு கணவன் மனைவி அந்நியோன்யத்தை இதைவிட ஒருப் பாடல் வெளிப்படுத்திவிடுமா?
நமக்குமிதுப் போல் ஒரு துணைக் கிடைக்குமா? என்று ஏங்க வைக்கும் பாடல்.
காலத்தையும் தாண்டி என் மனதில் நின்ற பாடல்.

பெண்: நான் பேச நினைப்பதெல்லாம்
             நீ பேச வேண்டும், நீ பேச வேண்டும்.
.            நாளோடும் பொழுதோடும்
             உறவாட வேண்டும். உறவாட வேண்டும்.
         
 ஆண்:  நான் காணும்  உலகங்கள்
               நீ காண வேண்டும், காண வேண்டும்
              நீ காணும் பொருள்
              யாவும் நானாக  வேண்டும், நானாக  வேண்டும்.
                              (நான்...,)


பெண்:  பாலோடுப் பழம் யாவும்
              உனக்காக வேண்டும், உனக்காக வேண்டும்.
               பாவை, உன் முகம் பார்த்துப்
               பசியாற வேண்டும், பசியாற வேண்டும்.
               மனதாலும், நினைவாலும்         
               தாயாக வேண்டும். நானாக வேண்டும்
              மடிமீது விளையாடும்
             சேயாக வேண்டும் நீயாக வேண்டும்.
                                                            (நான் ..,)

             சொல்லொன்றும் மொழியென்றும்,
            பொருள் என்றுமில்லை,பொருள் என்றுமில்லை.
            சொல்லாத சொல்லுக்கு
            விலையேதுமில்லை.விலையேதுமில்லை.
            ஒன்றோடு ஒன்று உயிர் சேர்ந்த பின்னே
             உயிர் சேர்ந்தப் பின்னே,
             உலகங்கள் நமையன்றி 
             வேறேதுமில்லை,வேறேதுமில்லை.
                           (நான்...,)         

 படம்: பாலும், பழமும்
நடிகர்கள்: சிவாஜிகணேசன், சரோஜாதேவி
இசை: M.S.விஸ்வநாதன்,
படலை எழுதியவர்: கண்ணதாசன்.

                    

காதல்

பெண்: உன்னைத் தானேத்
            தஞ்சம் என்று வந்தேன் நானே.
             உயிர் பூ எடுத்து, ஒரு மாலையிட்டேன்.
             விழிநீர் தெளித்து
             ஒருக் கோலமிட்டேன்.
                        (உன்னைத்....)
              மலரின் கதவொன்றுத் திறக்கின்றதா?
              மௌனம் வெளியேறத் தவிக்கின்றதா?
              பெண்மை புதிதாகத் துடிக்கின்றதா?
              உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா?
              முத்தம் கொடுத்தானே
              இதழ் முத்துக் குளித்தானே
              இரவுகள் இதமானதா?
              கட்டிப் பிடித்தால், தொட்டு  இழுத்தால்
              வெட்கமென்ன சத்தம் போடுதா?

ஆண்: என்னைத் தானே தஞ்சம் என்று வந்தாய் மானே
            உயிர் பூவெடுத்து, ஒரு மாலையிடு,
          விழி நீர் தெளித்து, ஒருக் கோலமிடு.
                         (என்னைத்...,)
           உலகம் எனக்கென்றும் விளங்காதது,
           உறவே எனக்கின்று  விலங்கானது.
           அடடா, முந்தானை சிறையானது,
           இதுவே என் வாழ்வில் முறையானது .
          பாறை ஒன்றின் மேலே சிறுப் பூவாய்  முளைத்தாயே
          உறவுக்கு உயிர் தந்தாயே
          நானே எனக்கு நண்பன் இல்லையே
          உன்னால் ஒரு சொந்தம் வந்ததே.
                    (என்னைத்...,)

படம் :  நல்லவனுக்கு நல்லவன்.
நடிகர்கள்: ரஜினிகாந்த், ராதிகா,
இசை:  இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், P.சுசீலா.