14.9.10

தவிப்பு

தன் மரணத்தை நெருங்கும் ஒரு கணவன் தன் மனைவியுடன் தான் வாழ்ந்த காலத்தை  எண்ணியும் அவளை விட்டுப் பிரியப் போவதை நினைத்தும் பாடும் பாடல். இதுவும் என்னளவில்  காலத்தை வென்று ஏங்க வைக்கும் பாடல்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.
என் கண்ணில் பாவையன்றோ
என்னுயிர் நின்னதன்றோ.
               (உன் ....,)

உன்னைக் கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி.
பொன்னை மணந்ததால்
சபையில் புகழும் வளர்ந்ததடி.            
          (உன்...,)
காலச் சுமைத்தாங்கிப் போலே
மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்,
அதில் என் விம்மல் தணியுமடி.
ஆலம்விழுதுப் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன?
வேரென நீயிருந்தாய் அதில்
 நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்.
                                      ( உன்...,)
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ
என்னைப் பேதைமை செய்ததடி.
பேருக்குப் பிள்ளையுண்டு,
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்?
உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்.

படம்: வியட்நாம் வீடு
நடிகர்கள்: சிவாஜி கணேசன், பத்மினி
பாடியவர்: T.M.சௌந்தரராஜன்.
இசை. K.V.மகாதேவன்

கருத்துகள் இல்லை: