18.9.10

உற்சாகம்

அருமையான இசை, சிலேடையுடன் கூடியபாடல் வரிகள். உற்சாகமான தருணத்தில் முணுமுணுக்கும்  பாடல்களில் இதுவும் ஒன்று.

கண்களும் ஏங்குது ,
காதலும்  பொங்குது அம்மாடியோ,
இருமனம் ஏங்குது,
ஏனின்னும் தயங்குது  அம்மாடியோ,
பொத்திவச்ச ஜாதி முல்லை
பொத்திவச்ச ஜாதிமுல்லை,
துணிப் போட்டு மறைச்சால்கூட
வாசம்தான் வீசுது  வெளியே.
வெளிவேஷம்  போட்டால்கூட
பாசம்தான் தெரியுது வெளியே
காதலிது பொல்லாதது போடி,
கண்ணாலதான் கதைப் பேசுது  வாடி,
                  (கண்களும்...,)
கோழிக்குதான் தீனியை வெச்சான்
தேவிக்குதான் ஜாடைய வச்சான்
மிளகாயை காயவச்சா
விழியம்பை பாயவச்சா
பாதையில போகையில
பாதிக் கண்ணால் பார்க்கையில
மனசுந்தான் உடஞ்சுதடி ,
கொலுசுந்தான் கழண்டதடி
எடுத்ததுக் கொலுசை,
கொடுத்தது மனசை,
எடுத்ததுக் கொலுசை
கொடுத்தது மனசை..,
                 (கண்களும்...,)

 காயவச்ச தாவாணி காத்துலதான் பறந்ததடி
காளையின்மேல் விழுந்ததடி,
காதலுந்தான் வளர்ந்ததடி,
பூவை நீ வைக்கையிலே  ஓடையிலே விழுந்ததடி
கைநீட்டி எடுக்கையிலே ஓடித்தான் போனதடி
மிதந்தது ரோசா,  
கவர்ந்தது  ராசா

மிதந்தது ரோசா,  
கவர்ந்தது  ராசா

கருத்துகள் இல்லை: