15.9.10

சோகம்

ஒரு கணவன் தன் மனைவி இறப்புக்கு எவ்வாறு வருந்துகிறான் என்பதை  விளக்கும் பாடல்.
இந்த பாடலைப் போல் தனக்கும் இதுப் போல் கணவன் அமைய மாட்டானா? என (90களின் காலகட்டத்தில்) பெண்களை ஏங்க  வைத்த பாடல். எனக்குத் தெரிந்தப் பெண் ஒருத்தி  இதுப் போல் என் வீட்டுக்காரரும் எனக்கு செய்யணும் னு சொல்லுவாங்க.
------------------------------------
சோலைப் பசுங்கிளியே
 சொந்தமுள்ளப் பூங்கொடியே
ஈச்ச இளங்குருத்தே
என் தாயி சோலையம்மா
கோடித் திரவியமே                                 
 வந்தது வந்தது ஏன்?
கொள்ளைப் போனது போனது ஏன்?
 ஆவித் துடிக்க விட்டு
சென்றது, சென்றது ஏன்?
விட்டு சென்றது, சென்றது ஏன்?

கண்ணுப் படப் போகுதுன்னு
பொத்தி வச்சப் பூங்குயிலே
மண்ணுப் பட்டுப் போகுமென்று
நெஞ்சு இன்று  தாங்கலியே
வாங்கி வந்த மல்லி இன்னும் வாசமின்னும் போகலியே
பந்தகாலுப் பள்ளமின்னும் மண்ணெடுத்து மூடலியே
நீ வாழ்ந்த காட்சியெல்லாம் தேடுகின்றேனே,
நானிங்கு நாதியின்றி வாடுகின்றேனே
                                         (சோலைப் ....,)
தங்கத்துலத் தாலிப் பண்ணிப்
தங்கத்துக்குப்   போட்டேனே
தாங்கியவள் வாழவுமில்லை
தட்டுக் கேட்டுப் போனேனே.
தங்கநிற தாமரையை
செங்கரையான் தீண்டிடுமோ?
மஞ்சமுக மல்லிகையை
மங்கரையான் மாத்திடுமோ,
கற்பூரக் கட்டி ஒண்ணு காத்துலப்  போனதடி,
செந்தூர வாழை ஒன்னு
சேத்துல சஞ்சதடி,
                  (சோலை....,)

படம்: என் ராசாவின் மனசுல,
நடிகர்கள்: ராஜ்கிரண், மீனா,
இசையமத்து பாடியவர்: இளையராஜா.

கருத்துகள் இல்லை: