17.9.10

தென்றல்

தமிழ் சினிமாவில் பெண்களின் காதலை கண்ணியமாக சொன்ன திரைப் படங்கள் மிகக்குறைவு. அதில் ஒன்று. கதாநாயகன் தனக்குக் கிடைக்காவிட்டாலும், அவனை எண்ணி, எண்ணி உற்சாகத்தோடு படும் பாடல்.
-----------------------------------------------

ஏ பெண்ணே, பெண்ணே
என்னாச்சு?
ஏனிந்த உற்சாகப் பெருமூச்சு?

மடைத் தாண்டும்,
கரைத் தாண்டும் ,
படைத் தாண்டும் ,
தடைத் தாண்டும்,
நதியாக, நதியாக ஆனேனே

கடலுக்கும், மணலுக்கும்
ஓயாத தூதாக
நதி போடும் அலையாக ஆனேனே

வெள்ளத்தில் மீனானேன்
வேகத்தில் மானேன்
கவிப் படும் காற்றானேன்
கரையெல்லாம் ஊற்றானேன்
        (ஏ பெண்ணே.....,)


என் சோட்டுப் பெண்களெல்லாம் வாக்கப்பட்டுப் போகையிலே,
எட்ட நின்று கண்விரிய சன்னல் வழி பார்த்திருந்தேன்
தாலியில்லை, மாலையில்லை, காலில் ஒரு மெட்டியில்லை,
தோரணங்கள் கட்டவில்லை, தோழிப் பெண்கள் பக்கமில்லை.
கதையாய் ஆண்டாளை எல்லாரும் படித்தார்கள்,
அவளாய் வாழ்கின்ற பெரும்பேற்றை அளித்தாய்
உன் வீட்டைத் தேடி என்றும் என் அன்னம் வந்ததில்லை
நான் சொல்லும் சேதி ஏந்தி, என் தென்றல் வந்ததில்லை..,,
 என் ஆசை நினைவை அள்ளி,அள்ளி மேலே ஊற்றிக் கொள்வேன்
இனி இன்னோர் ஜென்மம் என்றால்கூட நான் இதேப்போல் வாழ்வேன்...,

                                                                (ஏ பெண்ணே...)

புத்தம்புது சேலையிலே  நானிருந்தேன் அன்றிரவு..,
வெக்கத்திலே தத்தளித்து வேர்த்துக்கொட்டும் வெண்ணிலவு..,
நகரும் நிழலோடுப் போராடி நின்றேன்
நதியின் துளியொன்றை மகனாகக் கொண்டேன்
இது எங்கோ செல்லும் பாதை
நான் தீயை தின்ற சீதை  என் கையில் கொஞ்சும் மழலை
நான் வேண்டிப்  பெற்ற சிலுவை
என் நெஞ்சுக்குள்ளே  ஆடும்ஆடும் நில்லா ஊஞ்சல் நீயே
ஒருபோதும் எனை நீங்கி செல்லா நீயும் இன்னோர் தாயே
                                                                                      (ஏ பெண்ணே...,)

படம்:  தென்றல்
இயக்குனர்: தங்கர்பச்சான்
நடிகர்கள்; பார்த்திபன்,உமா
இசை: தெரியவில்லை

கருத்துகள் இல்லை: