15.9.10

ஏக்கம்

காற்றுக் கூட தமக்குள் இருக்கக்கூடாது நினைத்து ஏங்கும் பெண்ணின் மனநிலையை உணர்த்தும் அழகானப்   பாடல். எல்லோரும் பல ஜென்மம் சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், கதாநாயகனுடன் சேர்ந்த இந்த ஜென்மமேப் போதும் ஈரேழு  ஜென்மம் வாழ்ந்த  திருப்தியை அவள் அடைந்துவிட்டாள்  என்றுக் கூறும் பாடல். அதனாலேயே எனக்குப்  பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.
-----------------------------------------------------------
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திப் பகல் உன்னுடனே நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம், உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்துலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்.
                              (அக்கம்..,)

நீப் பேசும் வார்த்தைகள்  சேகரித்து,
செய்வேன் அன்பே ஒரு அகராதி,
நீத் தூங்கும் நேரத்தில் தூங்காமல்,
பார்ப்பேன் தினம் உன் தலைக் கோதி,
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சு காரின் வெப்பம் சுமப்பேன்.
கையோடுதான் கைகோர்த்துதான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்,
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
                                      (அக்கம்...,)
நீயும் நானும் சேருமுன்னே
நம் நிழல் ரெண்டும் ஒன்று கலக்கின்றதே ,
நேரம் காலம் தெரியாமல்
நிஜமென்று விண்ணில் மிதக்கின்றதே,
உன்னாலிங்கு  பெண்ணாகப் பிறந்ததன்
 அர்த்தங்கள் தெரிந்துக் கொண்டேன்.
உன் தீண்டலில் என் தேகத்தில்
 புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும்
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்.

படம்: கிரீடம்,
நடிகர்கள்: அஜீத், த்ரிஷா

கருத்துகள் இல்லை: