15.9.10

காதல்

.
சாதாரண வரிகள், எளிமையான் இசை, ஆனாலும் ஏனென்றுத் தெரியாது.  இந்த பாடல் மிகவும்   பிடிக்கும்

ராஜராஜசோழன் நான்,
எனை ஆளும் காதல் தேசம் நீதான்,
ராஜராஜசோழன் நான்,
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே, காதல் தேனே
கை வீசும்போது பாயும் மின்சாரமே
மண்மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாசப் பூமியிங்கு உண்டானதே.
                              (ராஜராஜ..,)
கண்ணோடுக் கண்களேற்றும் கற்பூரத் தீபமே
கைநீட்டும்போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடைமேலே
ஓரங்க நாடகம்.
இன்பங்கள் பாடம்  சொல்லும் என்  தாயகம்.
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்.
அங்கங்கு ஆசைத்தீயில் நான் வேகிறேன்.
மூன்றாவது மோகனம்
என் காதல் வாகனம்,
செந்தாமரை, செந்தேன்மழை
என் ஆவி நீயே தேவி....,
                 (ராஜ ராஜ...,)

கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்  சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டுக்
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கலேன்று போய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி  செல்வாக்கிலே 
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே
நீராடும் நேரமே 
 புல்லாங்குழல் தள்ளாடுமே
போன்மேனிக்கே ஹாய் ராணி
                         (ராஜராஜ....)

படம்: ரெட்டைவால் குருவி
நடிகர்கள்:  மோகன், ராதிகா, அர்ச்சனா,
இசை: இளையராஜா.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

ஓ! ராஜி இன்று தான இங்கு வந்தேன். சில பாடல் வரிகளுக்காக ஏங்குவது உண்டு. இங்கு என் தாகம் தீருமோ. தேடுகிறேன். நன்றி வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com